Facebook - ல் எப்படி நல்ல ஒரு விற்பனையாளரை கண்டுபிடிப்பது?
1. இன்று நாம் அனைவருமே நமக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க கடைக்கு நேரடியாக செல்வதில்லை. ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் நாம் வாங்க விரும்புகின்றோம். இதற்கு பலகாரணகள் உண்டு.
1. நேரம் இல்லை என்பதால்.
2. கடைக்கு சென்றால் கூட ஆன்லைன் போல காலெக்ஷன் கிடைப்பதில்லை.
3. ஆன்லைனில் விலை குறைவு காரணமாக
4. வீட்டிற்கே பொருட்கள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2. இன்று விற்பனையாளர்கள் அனைவருமே மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆன்லைன் மூலமாகவே அணைத்து பொருட்களை விற்பனை செய்கின்றனர். ( Manufacturer, Supplier, Dealer, Wholesaler & Reseller)
3. Facebook மார்க்கெட்-ல் நீங்கள் ஒரு பொருளை தேடினால் விற்பனை செய்யக்கூடிய அணைத்து விற்பனையாளர் தகவல் உங்களுக்கு கிடைக்கின்றன.
4. முதலில் செய்யவேண்டியது விற்பனையாளர் Message Request அனுப்பவேண்டும். அவர் பதில் அளித்தால் நீங்கள் மொபைல் நம்பர் பெற்று தொடர்பு கொண்டு பேசவேண்டும்.
5. அல்லது வாட்ஸாப்-ல் மெசேஜ் செய்து பொருட்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.
நீங்கள் கேட்கவேண்டியதில் சில..
1. எத்தனை வருடம் தொழில் செய்து வருகின்றீர்கள்
2. பொருட்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்
3. உங்கள் தொழிலுக்கான வெப்சைட் உள்ளதா என்று கேட்கவேண்டும்.
4. இதற்கு முன் எவரேனும் இந்த பொருளை வாங்கி ( Review / Feedback ) கொடுத்து உள்ளார்களா என்று அறிந்து கொள்ளவேண்டும்.
5. customer-க்கான வாட்ஸாப் குழு உள்ளதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
6. கூகிள் பிசினஸ் - ல் உங்கள் பொருளை லிஸ்ட் செய்து உள்ளீர்களா என்று அறியவேண்டும்.
7. தயாரிப்பாளராக இருந்தால் GST வைத்துள்ளாரா கேட்கவேண்டும். ஷாப் விசிட்டிங் கார்டு கேட்கவேண்டும்.
8. மேலும் Product Exchange இருக்கிறதா என்று அறிய வேண்டும்.
9. Delivery / Return / Refund - விவரங்களை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் யோசிக்கலாம் எவ்வளவு கேட்கவேண்டுமா என்று. இவற்றை கேட்ப்பதன் மூலம் உங்களுக்கு அவர்களை முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் fake supplier இடம் இருந்து ஏமாறுவதை தடுக்கமுடியும்.
முக்கியமாக நிறைய (Manufacturer, Supplier, Dealer, Wholesaler & Reseller) விற்பனையாளர்கள் இது போன்ற விவரங்கள் வைத்து இருப்பதில்லை. உங்களுக்கு அவர்களின் பேச்சில் நம்பிக்கை இருந்தால் பொருட்களை வாங்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
Facebook -ல் லட்ச கணக்கான விற்பனையாளர்கள் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அவர்களின் முழு விவரங்களை அறிந்து கொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.
Facebook -ல் Reseller அதிகப்படியாக விற்பனை செய்பவர்ககள் இருக்கிறார்கள். நீங்கள் மொபைல் மூலம் தொடர்ப்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

0 Comments